Actor vijay speak about our farmers in a meeting

இந்தியா வல்லரசாக மாறுவதை பிறகு பார்த்துக் கொள்ளலாம், முதலில் விவசாயிகளுக்கான நல்லரசாக மாற வேண்டும் என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் பெரும்பாலும் எந்த விஷயங்கள் குறித்தும் கருத்து தெரிவிப்பதை தவிர்த்துவிடுவார். அதுவும் அரசியல் என்றால் அவர் சுத்தமாக எதுவும் சொல்ல மாட்டார்.

இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற விழாவில் பேசிய நடிகர் விஜய், விவசாயம்தான் நம் நாட்டின் முதுகெலும்பு என்றும் அதை நாம் சிறப்பாக பேணி பாதுகாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்தியா வல்லரசாக மாறுவதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றும் முதலில் விவசாயிகளுக்கான நல்லரசாக மாற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

மூன்று வேலை உணவு நமக்கு சுலபமாக கிடைப்பதால் அதன் மதிப்பு தெரியாமல் போய்விட்டதாக விஜய் தெரிவித்தார்.

நாம் நன்றாக உள்ளோம், ஆனால் நமக்கு சோறு போடும் விவசாயிகள் நன்றாக இல்லை என தெரிவித்த விஜய், அரிசியை உற்பத்தி செய்துவிட்டு, அதை இலவசமாக பெற விவசாயிகள் ரேஷன் கடையில் வரிசையில் நிற்கிறார்கள் என வேதனை தெரிவித்தார்.