வாரிசு நடிகர்கள் திரைக்கு வருவதைப் போலவே நடிகர் விஜய் மகன் சஞ்சயும் கேமராவுக்கு முன் ஆக்சன் காட்டத் தொடங்கி இருக்கிறார். அவர் நடித்த ஜன்சன் புத்தாண்டான இன்று வெளியாகி இருக்கிறது.

தமிழ் திரையுலகின் வசூல் சர்க்கரவர்த்தி எனக் கொண்டாடப்படுபவர் விஜய். அவருக்கு, சஞ்சய் என்ற மகனும், திவ்யா ஷாஷா என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இருவருமே விஜய் நடித்த படத்தில் சிறு வேடங்களிலும் நடித்துள்ளனர். இதில் சஞ்சய், விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில், ’’அடிச்சா தாங்கமாட்ட”  பாடலில் தலைகாட்டி நடனமாடி விட்டுப் போயிருந்தார். கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட சஞ்சய் இப்போது “ஜங்ஷன் ” என்ற குறும்படத்தில் நடித்திருக்கிறார். புத்தாண்டு முன்னிட்டு சஞ்சய் நடித்துள்ள இந்தக் குறும்படம் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.