நடிகர் சங்க தேர்தல் இன்று மைலாப்பூரில் உள்ள எப்பாஸ் பள்ளியில்,  காலை 7 மணிக்கு துவங்கியது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு, தங்களுடைய வாக்குரிமையை நிறைவேற்றி வருகிறார்கள். 

நடிகர் சங்க தேர்தல் இன்று மைலாப்பூரில் உள்ள எப்பாஸ் பள்ளியில், காலை 7 மணிக்கு துவங்கியது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு, தங்களுடைய வாக்குரிமையை நிறைவேற்றி வருகிறார்கள்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில் நடிகர் சங்க தேர்தலில், தன்னுடைய வாக்குரிமையை நிறைவேற்றுவதற்காக , நடிகர் விஜய் எப்பாஸ் பள்ளிக்கு வந்து ஓட்டு போட்டார்.

வாக்கு போட வந்த பிரபலங்கள் நின்ற வரிசையில் நின்று, ஓட்டு போட்டதும், வெளியில் வந்த நடிகர் விஜய்யிடம் பேட்டி எடுக்க செய்தியாளர்கள் முயற்சி செய்தனர். ஆனால் நடிகர் விஜய், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு எந்த ஒரு பதிலும் கூறாமல், கம்முனு சென்றார்.

இவர் ஏற்கனவே சர்க்கார் பட விழாவில், "உசுப்பேத்துறவங்க கிட்டே உம்முனு இருக்கனும், கடுப்பேத்துறவங்க கிட்டே கம்முனு இருக்கனும், அப்படி இருந்தா வாழ்க்கை ஜம்முனு இருக்கும். என கூறியது போல் நடந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.