பிகில்’படப்பிடிப்புத் தளத்தில் காயமடைந்து இறந்த தொழிலாளிக்கு நஷ்ட ஈடு எதுவும் வழங்காமல், அதை மறைப்பதற்காக படப்பிடிப்பில் இருக்கும் அனைவருக்கும் நடிகர் விஜய் தங்க மோதிரம் பரிசளித்திருப்பது பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் ’பிகில்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடந்து வந்தது. கடந்த ஏப்ரல் 24ந்தேதி படப்பிடிப்பு தளத்தில் 100 அடி உயரத்தில் கிரேனில் தொங்கவிடப்பட்டிருந்த ஃபோக்கஸ் லைட் கீழே விழுந்தததில், அங்கிருந்த தொழிலாளி செல்வராஜ் (52) என்பவருக்கு காயம் ஏற்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏப்ரல் முதல் கடந்த 4 மாதங்களாக சிகிச்சையில் இருந்த அந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி மூன்று தினங்களுக்கு  முன் தினம்  சிகிச்சை பலனின்றி இறந்தார்.

சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் சிங்கப்பெண்ணே பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு ஈடுபட்டு வந்த நிலையில், காயமடைந்த தொழிலாளி பலியானது படப்பிடிப்பு குழுவை சோகமாக்கியது. திரை உலகமே சோகத்தில் மூழ்கியது. அன்றைய தினம் படப்பிடிப்பை ரத்து செய்த விஜய் இறந்த ஊழியருக்கு இழப்பீடு எதையும் அறிவிக்கவில்லை. ஆனால் அடுத்த இரு தினங்கள் கழித்து  படக்குழுவினருக்கு மோதிரமும் கால்பந்தும் வழங்கி கொண்டாடி இருக்கிறார்.

நேற்றுடன் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.இந்நிலையில் படத்தில் தன்னுடன் பணியாற்றியவர்களுக்கு பிகில் என்று பெயர் பொறிக்கப்பட்டுள்ள தங்க மோதிரத்தை பரிசாக அளித்துள்ளார் விஜய். மகளிர் அணிக்கு கால்பந்தும் வழங்கி இருக்கிறார். அதற்கான புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி வருகின்றன. ஆனால் உயிர் இழந்த தொழிலாளி குடும்பத்துக்கு என்ன உதவிகள் வழங்கப்பட்டது என்பது வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. படத்துக்கு 50 முதல் 60 கோடி வரை சம்பளம் வாங்கும் விஜய் இறந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு கொஞ்சம் தாராளமாக உதவினால் எல்லோரும் வாழ்த்துவார்கள்.காத்திருப்போம்.