சென்னையிலுள்ள அமெரிக்கன் இண்டர்நேஷனல் பள்ளியில் படித்து வரும் தளபதி விஜயின் மகள் பேட்மிண்டன் ஆட்டத்தில் அசத்தி வருவதாக பள்ளி நிர்வாகம் தனது முகநூல் பக்கத்தில் பெருமையுடன் பகிர்ந்துள்ள செய்தி தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தளபதி விஜய்க்கு சஞ்சய் என்ற ஒரு மகனும், திவ்யா என்ற ஒரு மகளும் உள்ளனர். இதில் சஞ்சய் ஒரு கிரிக்கெட் வீரர். தற்போது தனியாக ஒரு கிரிக்கெட் வைத்து பயிற்சி எடுத்து வருகிறார் சஞ்சய். மேலும், இவர் நடித்த இரண்டு குறும்படங்கள் சமீபத்தில் வெளியாகி வைரல் ஆனது.

 மகன் ஜேசன் சஞ்சய் அப்பாவை போலவே நடிப்பில் களமிறங்கி அப்பாவின் பெருமைக்கு வலு சேர்த்துவரும் நிலையில்,   விஜய்யின் மகள் திவ்யா சாஷா விளையாட்டில் சாதனை படைத்துள்ளார். சாஷா படிப்பை தாண்டி பேட்மிண்டன் விளையாட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இப்போது தான் படிக்கும் அமெரிக்கன் இண்டர்நேஷனல் பள்ளியில், அவர் இடம்பெற்ற பேட்மிண்டன் குழு சமீபத்தில் நடந்த ஒரு விளையாட்டு போட்டியில் 3வது இடம் பிடித்துள்ளதாம். இந்த தகவலை அவரின் பள்ளி நிர்வாகமே முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளனர்.