கேப்மாரியை பார்த்த சென்சார் போர்டு குழுவினர் படத்தில் நிறைய கிளுகிளுப்பான காட்சிகளும், வசனங்களும் இருப்பதால் கேப்மாரிக்கு 'ஏ'சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதுவரை 70 படங்களை இயக்கி உள்ள இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் படைப்பில் உருவாகியுள்ள ‘கேப்மாரி’ படம் நடிகர் ஜெய் நடிக்கும் 25வது படமாகும். 

தமிழ் திரையுலகில் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவர் எஸ்.ஏ.சந்திரசேகர். தளபதி விஜய்யின் அப்பாவான இவர், சட்டம் ஒரு இருட்டறை, நான் சிவப்பு மனிதன், நாளைய தீர்ப்பு உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக 'டூரிங் டாக்கீஸ்' படத்தை இயக்கியிருந்த எஸ்.ஏ.சந்திரசேகர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்குநராக ரீ-எண்ட்ரீ கொடுக்கவுள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அவரே தயாரித்து இயக்கியுள்ள புதிய படத்திற்கு 'கேப்மாரி' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.. இந்தப் படத்தில் ஹீரோவாக ஜெய் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை அதுல்யா மற்றும் வைபவி ஆகியோர் நடித்துள்ளனர். சத்யன், தேவதர்ஷினி, லிவிங்ஸ்டன், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், சித்தார்த் விபின் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். அடல்ட் காமெடியாக உருவாகியுள்ள கேப்மாரி படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடைந்து, தற்போது ரிலீசுக்கு தயாராகவுள்ளது. இதனால், படத்தை சென்சாருக்கு படக்குழு அனுப்பியிருந்தது. 

கேப்மாரியை பார்த்த சென்சார் போர்டு குழுவினர் படத்தில் நிறைய கிளுகிளுப்பான காட்சிகளும், வசனங்களும் இருப்பதால் கேப்மாரிக்கு 'ஏ'சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதுவரை 70 படங்களை இயக்கி உள்ள இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் படைப்பில் உருவாகியுள்ள ‘கேப்மாரி’ படம் நடிகர் ஜெய் நடிக்கும் 25வது படமாகும். அதேநேரம், ஏஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கும் கடைசி படமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.