Asianet News TamilAsianet News Tamil

நடிகர் விஜய் பற்றிய சர்ச்சை ட்விட்..! பகிரங்க மன்னிப்பு கேட்ட பிரபலம்!

'சர்க்கார்' பாடல் வெளியீட்டு விழாவின் போது... காமெடி நடிகர் கருணாகரன், விஜய் ரசிகர்களை கோபப்படுத்தும் விதமாக வெளியிட்ட ட்விட்டர் பதிவிற்கு தற்போது பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.
 

actor vijay controversy twit karunakaran say apologize
Author
Chennai, First Published Apr 19, 2019, 6:31 PM IST

'சர்க்கார்' பாடல் வெளியீட்டு விழாவின் போது... காமெடி நடிகர் கருணாகரன், விஜய் ரசிகர்களை கோபப்படுத்தும் விதமாக வெளியிட்ட ட்விட்டர் பதிவிற்கு தற்போது பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.

கருணாகரன் விஜய்க்கு எதிரான பதிவை பதிவிட்டதால், கடந்த சில மாதங்களாகவே காமெடி நடிகர் கருணாகரனுக்கு,  விஜய் ரசிகர்களுக்கும் இடையே டுவிட்டரில் கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகிறது.   விஜய் ரசிகர்கள் கருணாகரனை கடுமையான சொற்களில் தாக்க, அதற்கு கருணாகரனும் பதிலடி கொடுத்து வந்தார்.

actor vijay controversy twit karunakaran say apologize

இந்த நிலையில் நேற்று கருணாகரன், தான் ஓட்டு போட்ட புகைப்படத்தை பதிவிட்டு,  விஜய் குறித்து தான் பதிவு செய்த கருத்துக்கு வருந்துவதாகவும், தனது கருத்துக்கள் யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கோருவதாகவும் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளது, 'நான் பொதுவாக யாரையும் வெறுப்பதில்லை. நடிகர் விஜய்க்கு எதிராக வெறுக்கத்தக்க ஒருசில வார்த்தையை நான் பயன்படுத்தியது தவறுதான். அதற்காக அவரிடம் நான் மன்னிப்பு கோருகிறேன். நான் மிகவும் விரும்பும் நடிகர்களில் ஒருவர் விஜய். அவருக்கும் இது தெரியும். சமூகவலைத்த்தில் நான் பயன்படுத்திய  எந்தவொரு வார்த்தையாவது யாரையாவது புண்படுத்தி இருந்தால் அதற்காக மன்னிப்பு கோருகிறேன்' என்று கருணாகரன் கூறியுள்ளார். 

actor vijay controversy twit karunakaran say apologize

இத்தனை மாதம் கழித்து கருணாகரன் திடீரென மன்னிப்பு கேட்க, என்ன காரணம் என்றும் விஜய் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்!

Follow Us:
Download App:
  • android
  • ios