actor vevik daughter first time appear in television channel

நடிகர் விவேக், தன்னுடைய காமெடி மூலம் பல்வேறு விழிப்புணர்வு கருத்துக்களை மக்களிடம் கொண்டு போய் சேர்த்தவர். இவருடைய காமெடிக்கு தற்போது வரை பல ரசிகர்கள் உள்ளனர்.

கடந்த சில வருடங்களுக்கு முன், காமெடியை ஓரம் கட்டிவிட்டு ஹீரோவாக நடித்தார், அது கைகொடுக்காததால் மீண்டும் காமெடி பக்கமே திரும்பிய விவேக். சமீபத்தில் மனிதன், காஷ்மோரா, பிருந்தாவனம் ஆகிய படங்களில் நடித்தார்.

விவேக் திரையுலகிற்கு வந்து பல வருடங்கள் ஆனாலும் தற்போது வரை தன்னுடைய குடும்பத்துடன் அதிகமாக அவர் வெளியே வந்ததே இல்லை, முக்கியமாக அவருடைய இரண்டு மகள்கள் பற்றி பலருக்கும் தெரியாது.

இந்நிலையில் தற்போது முதல் முறையாக நடிகர் விவேக் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில், தந்தையை ஆச்சர்ய படுத்துவதற்காக சின்னத்திரையில் அவருடைய மகள் தோன்ற உள்ளாராம். இந்த நிகழ்ச்சிக்காக பல விவேக் ரசிகர்கள் செம வெயிட்டிங்.