98 வயதில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட பழம்பெரும் நடிகர் தற்போது அதில் இருந்து மீண்டு வந்ததற்கு, பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

நடிகர் கமல்ஹாசன் நடித்த  ’பம்மல் கே சம்பந்தம்’, படத்தில் கமல்ஹாசனின் தாதாவாக நடித்திருந்தனர், பிரபல மலையாள பட நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி. மேலும், சந்திரமுகி, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது 98 வயதாகும் இவர், சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், தற்போது இவரது உடல் பூரண குணமடைந்து விட்டதாக இவரது மகன் பவதாசன்  தெரிவித்துள்ளார்.

இளமை பருவத்தில் இருந்தே உடல் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை காட்டி வரும் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி, ஜிம் ஒன்றை நடத்தில் அதில் பல மலையாள திரையுலகை சேர்ந்த பிரபலங்களுக்கு பயிற்சியளித்து வந்துள்ளார். 

98 வயதிலும் கொரோனாவை வென்று, பூரண உடல் நலத்தோடு வீடு திரும்பியுள்ள இவர்க்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தொடர்ந்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.