actor udhayaraj and janani marriage

தமிழில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் மாஸ்டர் உதயராஜ். இவர் கடந்த 2000ஆம் ஆண்டு 'நிலா காலம்' படத்தில் நடித்ததற்காக, தேசிய விருதையும் பெற்றவர். 

மேலும், நடிகர் அதர்வா அறிமுகமான 'பானா காத்தாடி', 'வந்தா மல' ஆகிய படங்களில், குணசித்திர வேடத்தில் நடித்தவர். இவர் பார்க்க சிறுவன் மாதிரி தெரிந்ததாலேயே இவருக்கு பல படங்களில் ஹீரோவாக நடிக்க வாய்புகள் கிடைக்க வில்லையாம்.

இந்நிலையில் உதயராஜுக்கும், ஜனனி என்கிற பெண்ணுக்கும் இன்று காலை மிகவும் பிரமாண்டமாக பிரபல கோவிலில் திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கலந்துக்கொண்டு இவர்களை வாழ்த்தினர்.