தமிழ், தெலுங்கு, மலையாளம், உள்ளிட்ட மொழிகளில் 400க்கும் அதிகமான படங்களில் நடித்து பிரபலமானவர் குணச்சித்திர நடிகர் தலைவாசல் விஜய். திரைப்படங்களையும் தாண்டி பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். மேலும் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் பணியாற்றிவருகிறார். 

இந்நிலையில்,  இவர் நடிகராக இருந்த போதிலும் இவருடைய குழந்தைகளை விளையாட்டு வீரர், வீராங்கனையாக வளர்த்துள்ளார்.

இவரின் மகள் ஜெயவீணா மற்றும் ஜெயவந் குமார் ஆகிய இருவருமே நீச்சல் வீரர், வீராங்கனைகள். இதுவரை பல்வேறு நீச்சல் போட்டியில் பங்கேற்று பல தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை வாங்கி குவித்துள்ளனர்.

தற்போது, தலைவாசல் விஜய் மகள் ஜெயவீணா... நேபாளில் நடைபெற்ற 13 வது, தெற்கு ஆசிய , பிரேஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் 50 கிலோ மீட்டர் நீச்சல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

இந்த தகவலை, மிகவும் பெருமையுடன் வெளிப்படுத்தியுள்ளார் நடிகர் தலைவாசல் விஜய். இதை தொடர்ந்து பல ரசிகர்கள், வெள்ளிப்பதக்கம் வென்றுள்ள ஜெயவீணாவிற்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதுவரை, ஜெயவீணா 312 (தங்கம், வெள்ளி, வெண்கலம்) போன்ற பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.