கொரோனா பாதிப்பால், இந்தியா முழுவதும் பல்வேறு தொழில்கள், பாதிப்படைந்துள்ளது.  குறிப்பாக அன்றாடம் வேலைக்கு செல்லும் கூலி தொழிலாளர்கள் பலர் அடுத்த வேலை சாப்பிட்டிற்கு கூட கஷ்டப்படும் நிலை உருவாகியுள்ளது. இப்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலர் தானாக முன் வந்து, உணவு, மற்றும் மளிகை பொருட்களை வழங்கி வருகிறார்கள்.

மேலும், திரையுலகை சேர்ந்த பலர் தற்போது படப்பிடிப்பு பணிகள் முடங்கியுள்ளதால் கஷ்டப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு பிரபலங்கள் தங்களால் முடிந்த வரை உதவிகள் செய்து வருகிறார்கள்.


நலிந்த சினிமா நடிகர்களுக்கு...  வசதி படைத்த நடிகர்கள் தானாக முன் வந்து உதவி செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரேணிகுண்டா, வாத்திக்குச்சி போன்ற பல படங்களில் நடித்துள்ள நடிகர் தீப்பெட்டி முருகன் கஷ்டத்தில் இருப்பதை அறிந்த நடிகர் விஷால், பூச்சி முருகன், ஸ்ரீமன் ஆகியோர் நேராக அவர் வீட்டிற்கே சென்று அவருக்கு உதவி செய்துள்ளனர்.

இதுகுறித்து அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஒரு மாதத்திற்கு தேவையான வீட்டு பொருட்களை பிரேம்குமார், பூச்சி முருகன், விஷால், ஸ்ரீமன் கொடுத்தனர்.   ஸ்ரீமன் அவர்கள் என்னுடைய அக்கவுண்டில் பணம் போட்டுள்ளார். உதவி செய்த அனைவருக்கும் நன்றி’ என்று கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ இதோ...