actor suriya vairal message what?
தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியாக நடித்து வரும் நடிகர் சூர்யா, இவர் அனுப்பியுள்ள ஒரு மெசேஜ் ரசிகர்கள் அனைவராலும் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அப்படி அந்த மெசேஜில் என்னதான் அனுப்பினார் சூர்யா தெரியுமா...?
விரைவில் தான் புதிதாக நடித்துள்ள திரைப்படம் ரிலீஸ் ஆகவுள்ளது, கண்டிப்பா அதனை அனைவரும் திரையரங்கம் சென்று பாருங்கள் என்ற செய்தி இடம்பெறவில்லை. அப்படி இருந்தால் அதனையாரும் கண்டுக்கொள்ள கூட மாட்டார்கள்.
ஆனால் வந்தது வேறு…"
ஹாய் நான் சூர்யா. இந்த குறுந்தகவலை படிச்சுட்டு உங்க நண்பர்களுக்கும் ஃபார்வேடு பண்ணுங்க என்று தன்னை அறிமுகப்படுதிக்கொண்டுள்ளார்.
அதன்பின் எழுதப்பட்டிருப்பதுதான் இந்த செய்தியிலிருக்கும் பிரதான விஷயம்.
"வசதியின்மை காரணமாக தங்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிடுகிற சூழ்நிலைக்கு தள்ளப்படுகிற மாணவர்கள் யாராக இருந்தாலும் தயங்காமல் என்னை தொடர்பு கொள்ளவும். உங்கள் கல்வி தொடர நான் உதவி செய்ய தயாராக இருக்கிறேன்".
இவ்வாறு எழுதப்பட்டுள்ள அந்த தகவலில் சூர்யாவினால் நடத்தப்படும் அகரம் பவுண்டேஷன் நிர்வாகியின் தொலைபேசி எண் தரப்பட்டுள்ளது. அது 9841091000. இந்த செய்தியை தற்போது சூர்யாவின் ரசிகர்கள் மட்டும் இன்றி பலரும் வைரலாக பரப்பி வருகின்றனர்.
