இந்த படம் கடந்த மாதம் அமேசான் பிரைமில் வெளியிடப்பட்டது. லாக்டவுன் நேரத்தில் சூர்யாவின் சூப்பர் ஹிட் திரைப்படம் ஆன்லைனில் வெளியானதால் அவருடைய ரசிகர்கள் செம்ம குஷியில் இருந்தனர். 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தற்போது இறுதிச்சுற்று இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்துள்ள சூரரைப்போற்று திரைப்படத்தை காண ரசிகர்கள் மரண வெயிட்டில் உள்ளனர். சாக்லெட் பாய் கதாபாத்திரத்தில் ஆரம்பித்து தற்போது ஆக்‌ஷன் ஹீரோவாக கலக்கி வரும் சூர்யாவின் படங்கள் அனைத்தும் அடுத்தடுத்து சூப்பர் ஹிட்டடித்து வருகிறது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அப்படி சூர்யா நடிப்பில் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 24. சைன்ஸ் பிக்ஷன் படமான இதில் 3 விதமான கெட்டப்புகளில் தோன்றி சூர்யா ரசிகர்களை திணறடித்தார். விக்ரம் குமார் இயக்கத்தி, ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்த படம் கடந்த மாதம் அமேசான் பிரைமில் வெளியிடப்பட்டது. லாக்டவுன் நேரத்தில் சூர்யாவின் சூப்பர் ஹிட் திரைப்படம் ஆன்லைனில் வெளியானதால் அவருடைய ரசிகர்கள் செம்ம குஷியில் இருந்தனர். திரும்ப, திரும்ப படத்தை பார்த்து எனஜாய் செய்யலாம் என திட்டமிட்டிருந்த சமயத்தில் திடீரென அந்த படம் அமேசானில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம், படத்தின் ஆடியோ குவாலிட்டி நன்றாக இல்லாததால் நீக்கப்பட்டதாகவும், விரைவில் அந்த குறையை சரி செய்து விட்டு படத்தை மீண்டும் பதிவேற்றுவோம் என்றும் அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.