தமிழில், 'பிரம்மா', 'மாயவன்' ஆகிய படங்களில் நடித்துள்ள நடிகை லாவண்யா திரிபாதி தன்னை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து செய்தவர் என்றும், மூன்று முறை கருக்கலைப்பு செய்துள்ளார் என அதிர்ச்சியூட்டும் தகவலை நடிகர் சுனிசித் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக,  நடிகை லாவண்யா திரிபாதி சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

நடிகர் சசிகுமார் நடித்த 'பிரம்மா' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் லாவண்யா திரிபாதி. இந்த படத்தை தொடர்ந்து அதிக அளவில் தமிழ் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால், தெலுங்கு திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.

இந்நிலையில், நடிகர் . ஸ்ரீ மனோஜ் சுனிசித் என்கிற தெலுங்கு நடிகர், ஏற்கனவே தமன்னா, விஜய் தேவரகொண்டா போன்றவர்களை பற்றி சர்ச்சை கருத்தை வெளியிட்டுள்ள நிலையில், நடிகை லாவண்யா திருபாதிக்கும் தனக்கும் திருமணம் ஆகிவிட்டதாகவும், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்ததாகவும், மூன்று முறை அவர் கருக்கலைப்பு செய்ததாக சர்ச்சை கருத்தை இணையதள ஊடகம் ஒன்றிக்கு கொடுத்த பேட்டியில் தெரிவித்தார்.

உண்மைக்கு புறம்பான விதத்தில், லாவண்யா திரிபாதி மீது சுனிசித் கூறிய மோசமான புகாரை எதிர்த்து, நடிகை லாவண்யா...  ஹைதராபாத் சைபர் கிரைம் போலிசிஸில் ஆன்லைன் மூலம் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து விசாரணை செய்து வரும் போலீசார், அவரை தீவிரமாக தேடி வந்த நிலையில், ஓபன் டாக் விட்ட நடிகர், தற்போது தலைமறைவாகியுள்ளார்.