actor soori son acting in movie

வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் 'பரோட்டா' காமெடியில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார் நடிகர் சூரி. இதனால் இவருக்கு பரோட்டா சூரி என்றே பெயர் வந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து பல படங்களில் இவருக்கு நடிக்க வாய்புகள் கிடைத்தது... மேலும் இவர் இங்கிலீஷை தவறாகப் பேசி நடிக்கும் ஒரு ஸ்டைல் பலரையும் கவர்ந்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தற்போது இவரைத் தொடர்ந்து இவருடைய மகன் சர்வான் குழந்தை நட்சத்திரமாக நடிக்க உள்ளார். இந்தப் படத்தை

இயக்குனர் சுசீந்திரன் குழந்தைகளை வைத்து இயக்க உள்ளார். ஏஞ்சலினா என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின், இறுதிக்கட்ட படப்பிடிப்பு படு வேகமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் சுசீந்திரன் தன்னுடைய டுவிட்டரில், ஏஞ்சலினா படம் மூலம் சூரி அவர்களின் மகன் சர்வான் சினிமாவில் அறிமுகமாகிறான் என்று பதிவு செய்துள்ளார். இதனை சூரியின் ரசிகர்கள் பலர் வரவேற்றுள்ளனர்.