நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்த “வீரதீர சூரன்” என்ற திரைப்படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் சூரி நடித்துள்ளார். இதற்காக வழங்க வேண்டிய ரூ.40 லட்சம் ஊதியத்துக்கு பதில் சிறுசேரியில் ஒரு நிலத்தை தருவதாக அப்படத்தின் தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் மற்றும் விஷ்ணு விஷால் தந்தையுமான, ஓய்வு பெற்ற டி.ஜி.பி.யுமான ரமேஷ் குடவாலா கூறியுள்ளனர். 

அந்த நிலத்துக்காக இவர்கள் இருவரும் தன்னிடம் இருந்து ரூ.2.70 கோடியை கூடுதலாக பெற்று மோசடி செய்து விட்டதாக காவல்துறையில் நடிகர் சூரி புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் ரமேஷ் குடவலா, மற்றும் அன்புவேல்  ராஜன் மீது பதிவான வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். 

 

இதையும் படிங்க: இங்க நயன்தாரா... அங்க சமந்தா... டாப் லிஸ்டை பார்த்து வயிறெரியும் இளம் நடிகைகள்...!

இந்த வழக்கில்  முன் ஜாமீன் கோரி இருவரும் தாக்கல் செய்த மனு,  கடந்த முறை நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தன்னுடைய முன் ஜாமின் மனுவை திரும்ப பெற்றுக்கொள்வதாக ரமேஷ் குடவாலா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி, ரமேஷ் குடவாலாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் முன் ஜாமின் மனு தொடர்பாக நவம்பர் 26 ஆம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டார்.

 

இதையும் படிங்க: கொழு, கொழு குழந்தை முதல் ‘குட்டி’ நயனாக மாறியது வரை... அனிகாவின் யாரும் அதிகம் பார்த்திடாத போட்டோஸ்....!

இந்நிலையில், தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி திரைப்பட தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி ரவீந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. பின்னர் மனு தொடர்பாக சென்னை மத்திய குற்றப் பரிவு 8 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணை தள்ளிவைத்தார்.