Asianet News TamilAsianet News Tamil

கொரோனா தடுப்பு பணிக்காக ரோட்டில் இறங்கிய நடிகர் சசிகுமார்! போலீசாருடன் சேர்ந்து விழிப்புணர்வு!

கொரோனா வைரஸ், தமிழ் நாட்டு மக்களை ஒரு பக்கம் அச்சுறுத்தி வரும் நிலையில், அதில் இருந்து மக்களை காப்பாற்ற, மருத்துவர்கள், போலீசார், துப்புரவு பணியாளர்கள் என ஆளுக்கு ஒரு பக்கம் தூக்கம் இன்றி, இரவு பகலாக தங்களுடைய உயிரை பணயம் வைத்து போராடி கொண்டிருக்கிறார்கள்.
 
actor sivakumar work in corona control  volunteer for Madurai city
Author
Chennai, First Published Apr 19, 2020, 12:58 PM IST

கொரோனா வைரஸ், தமிழ் நாட்டு மக்களை ஒரு பக்கம் அச்சுறுத்தி வரும் நிலையில், அதில் இருந்து மக்களை காப்பாற்ற, மருத்துவர்கள், போலீசார், துப்புரவு பணியாளர்கள் என ஆளுக்கு ஒரு பக்கம் தூக்கம் இன்றி, இரவு பகலாக தங்களுடைய உயிரை பணயம் வைத்து போராடி கொண்டிருக்கிறார்கள்.

இந்த கொடிய வைரஸின் தீவிரம் தெரிந்தவர்கள், அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் வகையில் வீட்டிலேயே இருந்தாலும், சிலர் அடிக்கடி வெளியில் சுற்றுவது என அசால்டாக இருக்கிறார்கள்.

actor sivakumar work in corona control  volunteer for Madurai city

அதே போல், அத்தியாவசிய பொருட்களை கூட வீட்டின் பக்கத்திலேயே இருக்கும் கடைகளில் வாங்கி கொள்ளுமாறும், முடிந்தவரை மார்க்கெட் போன்ற அதிக மக்கள் கூட்டம் கூடும் இடங்களுக்கு வராமல் இருப்பதன் மூலமாகவே கொரோனாவை கட்டு படுத்த முடியும் என தொடந்து சுகாதார துறையை சேர்ந்த அதிகாரிகள் அறிவுறுத்து வருகிறார்கள்.

actor sivakumar work in corona control  volunteer for Madurai city

இந்நிலையில் மதுரையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள, காவலர்களுடன் கை கோர்த்து ஒருநாள் வாலண்டியராக பணியாற்றியுள்ளார் பிரபல இயக்குனரும் நடிகருமான சசிகுமார். அப்போது ஊரடங்கை மீறி, வாகனங்களில் சென்றவர்களிடம், நமக்காக இவர்கள் வீட்டை பிரிந்து கஷ்டப்படுறாங்க. நாம் தான் அவர்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என, வாகன ஓட்டிகளிடம் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

actor sivakumar work in corona control  volunteer for Madurai city

மதுரையில் தற்போதைய நிலவரப்படி, 40 க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்குள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவ மனைகளில் தனிமை படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios