ஒரு கதை இன்னும் எத்தனை படிகளில் ஏறி இறங்குமோ, அந்த சீமானுக்கே வெளிச்சம். விஜய்காக எழுதிய பகலவன் கதையை விதார்த் கிடைத்தால் கூட எடுத்துவிடுவார் போலிருக்கிறது சீமான்.

ஆனாலும், சம்பவம் சபையேறினால்தானே? இந்த நேரத்தில்தான், அண்ணே... நான் ரெடி என்று ஆன் தி ஸ்பாட் வாக்குறுதி கொடுத்தார் சிம்பு. வெங்காயமே முன் வந்து விலையை குறைத்துக் கொண்ட மாதிரி சிம்புவே முன் வந்து அழைத்தாலும் தயாரிப்பாளர் கிடைக்கணுமே? சமீபத்தில் ஹீரோ பட தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷை சந்தித்த சீமான், சிம்பு ரெடி... நீங்க ரெடியா? சுட சுட ஒரு வெடி போடலாம் என்று கேட்க, அவரும் அரை ஷட்டரை ஓப்பன் பண்ணியிருக்கிறாராம்.
 
இது ஒருபுறமிருக்க, எப்போதோ பூஜை போடப்பட்ட மாநாடு படத்திற்கு தயாராகி விட்டார் சிம்பு. அவர் தயாரானதையொட்டி அப்படத்தின் தயாரிப்பாளர் சிம்பு பயிற்சி எடுக்கும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோக்கள் வைரலாகி வருகிறது.  தர்பார் படத்தில் ரஜினி உடற்பயிற்சி செய்யும் வீடியோ வெறித்தனமாக இருந்தது. இந்நிலையில் அந்தக் காட்சிகளையும் சிம்பு பயிற்சி செய்யும் இந்த வீடியோவையும் ஒப்பிட்டு நெட்டிசன்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.