நடிகர் சிம்பு காதலிக்கும் பெண் யார், அவரை எப்போது சிம்பு திருமணம் செய்துகொள்வார் என்கிற விபரங்கள் தனக்குத் தெரியும் என்றும் ஆனால் அது குறித்து இப்போது சொல்ல முடியாது என்றும் நடிகர் கூல் சுரேஷ் ஒரு திரைப்பட விழா மேடையில் கூறியுள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சிம்புவின் தம்பி குறளரசனுக்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தவுடன் அனைவரின் முக்கிய கேள்வியாக சிம்புவின் திருமண டாபி மாறியுள்ளது. இது குறித்து சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டபோது உணர்ச்சி வசப்பட்டுக் கண்கலங்கிய டி.ராஜேந்தர், ‘என் தலையெழுத்து சரியில்லாததால அவனுக்குத் திருமணம் நடக்கல’ என்று மட்டுமே குறிப்பிட்டார்.

இந்நிலையில் ‘அந்த நிமிடம்’ படவிழாவில் பேசிய நடிகர் கூல் சுரேஷ், ‘சிம்புவுக்கு எப்போ கல்யாணம்னு கேட்டுக்கேட்டு தயவு செய்து டி.ஆர். சாரைத் தொந்தரவு பண்ணாதீங்க. சிம்பு யாரைக் கல்யாணம் செய்துக்கப்போறாரு. எப்பக் கல்யாணம்னு எனக்குத் தெரியும். ஆனா அதை இப்ப இங்கே சொல்ல முடியாது’ என்று சஸ்பென்ஸ் வைத்தார்.

இந்த கூல் சுரேஷ் பேச்சுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என்கிறீர்களா? அநேகமாக சிம்புவின் அத்தனை படங்களிலும் நடித்திருக்கும் கூல் சுரேஷ் சிம்புவின் பால்ய கால நண்பர். அவரது குடும்ப நண்பர். டி.ஆரின் கட்சியிலும் ஒரு முக்கியப் பொறுப்பில் உள்ளார்.