actor simbu joined with piyus and visiting the lake in selam

நடிகர் சிம்பு காவிரி தண்ணீருக்காக செய்தியாளர்கள் சந்திப்பின் போது கர்னாடக மக்களுக்கு வைத்த அன்பான வேண்டுகோளை அடுத்து, கர்னாடக மக்களும் நடிகர் சிம்புவின் பேச்சுக்கு அதிக மரியாதை செலுத்தினர்

அதாவது, தமிழக மக்களுக்கு காவிரி நீரை கொடுக்க கன்னட தாய்மார்களுக்கு மனது உள்ளது என்பதை கூற, ஒரே ஒரு டம்ளரில் தண்ணீர் கொடுப்பது போல வீடியோ எடுத்து பதிவிடுங்கள் போதும் என்றார். அதற்கேற்றார் போல் கன்னட மக்களும் ஒரு குவளை தண்ணீர் தருவது போல் வீடியோ எடுத்து பதிவிட்டு இருந்தனர்

நடிகர் சிம்புவின் பேச்சு கன்னட மக்களுக்கு அதிகம் பிடித்து போகவே, மக்கள் மத்தியில் ஹீரோ ஆனார்.

அவருக்கு ஆதரவு குரல் ஒலிக்கிறது.

இந்நிலையில்,நடிகர் சிம்பு இன்று காலை சேலம் ழூக்கனேரி ஏரியை சுற்றி பார்த்தார். உடன் சமுக ஆர்வலர் பியுஸ் அழைத்து சென்றார். இதன் மூலம் நடிகர் சிம்பு அரசியல் வர எதாவது ப்ளான் பண்றாரா ? அல்லது சமூக ஆர்வலர் பியுஸ் உடன் சேர்ந்து சமூக நலனில் ஈடுபட உள்ளாரா..?

அல்லது கோடையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் நீர் நிலைகளுக்கு சென்று சுற்றி பார்க்க சென்றாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.