தமிழ் சினிமாவில் சமீப காலமாக அதிக ஹாரர் படங்கள் வெளியாகி வருகிறது.  அந்த வகையில் 'அவள்' படத்தை தொடர்ந்து, நடிகர் சித்தார்த் நடித்து வரும் திகில் திரைப்படம் 'அருவம்'.  இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இயக்குனர் சாய் ஷங்கர் இயக்கும் இந்த படத்தில், நடிகர் சித்தார்த் கதாநாயகனாகவும், கேத்தரின் தெரேசா, கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.  மேலும் காமெடி நடிகர் சதீஷ், காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை சௌந்தர்யா மற்றும் தீபா ஐயர் ஆகியோர் ஆர்.ரவிச்சந்திரன் ட்ரிடென்ட்  ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளனர்.  இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார்,  என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிராவின் கே.எல் படத்தொகுப்பு செய்துள்ளார்.  இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. 

நடிகர் சித்தார்த் நடிப்பில், அடுத்ததாக 'சிவப்பு மஞ்சள் பச்சை' திரைப்படம் வெளியாக உள்ளது.  இதில் முதல் முறையாக ஜிவி.பிரகாஷ் உடன் இணைந்து நடித்துள்ளார்.  இந்த படத்தை 'பிச்சைக்காரன்', ' பூ' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சசி இயக்கி உள்ளார்.