சத்யராஜ் நடிப்பில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற படம் வால்டர் வெற்றிவேல். சினிமாவில் காவல்துறை அதிகாரிகளின் காட்சிகள் எப்படி அமைக்கப்பட வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த அமைந்தது. சென்டிமெண்டுகளால் நிறைந்த தமிழ் சினிமாவில் சத்யராஜின் ‘வால்டர் வெற்றிவேல்’பட டைட்டிலில் பாதியைச் சுருக்கி அவரது மகன் சிபிராஜ் படத்துக்கு ‘வால்டர்’என்று தலைப்பு வைத்தார்கள்.

இயக்குனர் அன்பரசன், திரைகதை, வசனம், எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் சிபிராஜ் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.  ஸ்ருதி திலக் 11:11 புரோடக்க்ஷன் பிரைவேட் லிமிடெட் தயாரித்திருந்தது. சிபிராஜுடன் சமுத்திரக்கனி, நட்ராஜ் உள்ளிட்டோரும் நடித்திருந்த இந்த படம் ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றது. 

இதையும் படிங்க: ட்ரான்ஸ்பிரன்ட் உடையில் செம்ம கவர்ச்சி... ஊரடங்கு நேரத்தில் நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக்கொள்ளும் ஷாலு ஷம்மு!

இதையடுத்து கபடதாரி என்ற படத்தில் நடித்து வருகிறார். தயாரிப்பாளர் தனஞ்செயன், ஜான் மகேந்திரன் திரைக்கதை எழுதியுள்ள இந்த படத்தை பிரதீல் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார். 2008ம் ஆண்டு ரேவதி என்பவரை திருமணம் செய்து கொண்ட சிபிராஜுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் மூத்த மகனுக்கு தீரன் என்று பெயர் வைத்ததற்கான காரணம் குறித்து ட்வீட் செய்துள்ளார்.

இதையும் படிங்க: என்ன கன்றாவி போஸ் இது... ஊரடங்கிலும் அடங்காத ஷாலு ஷம்மு... கடுப்பான நெட்டிசன்கள்...!

அதில், இந்திய சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக போராடி வீர மரணம் அடைந்து தமிழர்க்கு பெருமை சேர்த்த மாபெரும் போராளி! இவர் பெயரை என் மகனுக்கு சூட்டியதில் மிகவும் பெருமைப்படுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். நவம்பர் 9, 10 தேதிகளில்  புனேவில் தேசிய அளவிலான டோக்வாண்டோ போட்டிகளில் பங்கேற்ற சிபி சத்யராஜின் மகன் தீரன், 2 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.