’அஜீத்தைக் கண்மூடித்தனமாக ஆதரிக்கிறேன் என்கிற பெயரில் அவரது ரசிகர்கள் பலர் முட்டாள்தனமாக நடந்துகொண்டிருக்கிறார்கள்’என்று தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சிபி சத்யராஜ் காட்டமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இவர்கள் உண்மையில் ரசிகர்கள்தானா அல்லது வெறியர்களா என்று சந்தேகப்படும் அளவுக்கு மீண்டும் அஜீத் ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் வலைதளப் பக்கங்கள் மிக மட்டமாக  ஒருவரை ஒருவர் அடிக்கடி வசைபாடிவருவது வழக்கம். அதன் தொடர்ச்சியாக, அஜித்தின் திரைப்படம் 'நேர்கொண்ட பார்வை' அடுத்த வாரம் வெளியாக உள்ளதை ஒட்டி மீண்டும் இரு தரப்புக்கும் மத்தியில் பெரும் பஞ்சாயத்து துவங்கியுள்ளது. அந்தப் படத்தை விமர்சித்து இழிவுபடுத்தும் வகையில் #ஆகஸ்ட்8_பாடைகட்டு என்று விஜய் ரசிகர்கள் நேற்று ட்ரெண்ட் செய்தனர். இதற்கு பதிலடியாக அஜித் ரசிகர்கள் மீண்டும் #RIPactorVIJAYஎன்ற ஹேஷ்டேக்கை இந்திய அளவில் ட்ரெண்ட் செய்தனர். 

அஜீத் ரசிகர்களின் இந்த அவலட்சணமான பதிவை பல முன்னணி நடிகர்களும், அஸ்வின் ரவிச்சந்திரன் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களும் கண்டித்து வரும் நிலையில் நடிகர் சிபி சத்யராஜும் அப்படிப்பட்டவர்கள் முட்டாள்கள் என்று கண்டித்திருக்கிறார். அவர் தனது பதிவில்,... 'சில முட்டாள்கள் எதிர்மறையான ஹாஸ் டேக்கை உருவாக்கி ட்ரெண்ட் செய்வதைப் பார்க்கும் போது வெறுப்பாக இருக்கிறது! இதுபோன்ற அமங்கலமான செய்திகள்  ஒரு நபரை மேலும்  வலிமையாக்குகிறது என்பதை வரலாறு நிரூபித்துள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்.