அப்படி ஒரு தருணத்தில் மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் நின்று செல்ஃபி எடுத்துள்ளார். 

கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். நேற்று இரவு திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்த செய்தி தமிழ் சினிமாவையே கண்ணீர் கடலில் ஆழ்த்தியுள்ளது. தான் உயிர் பிரிவதற்கு முதல் நாளில் கூட கொரோனா விழிப்புணர்வு குறித்து மருத்துவர் என்ற முறையில் அவர் வெளியிட்டிருந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தைத் தொடர்ந்து மீண்டும் சந்தானத்துடன் இணைந்து, வாலிப ராஜா, சக்கப் போடு போடு ராஜா உள்ளிட்ட படங்களில் சேதுராமன் நடித்தார். ஆனால், அந்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. கடந்த ஆண்டு இறுதியில் கிருஷ்ணா சாய் இயக்கத்தில் வெளியான 50/50 படம் தான் சேதுவின் கடைசி படமாக மாறியுள்ளது.

இதையும் படிங்க: “இதுதான் என் கடைசி போட்டோ”... கவர்ச்சி கிளிக்ஸை தட்டிவிட்டு தலைமறைவான சனம் ஷெட்டி...!

இந்நிலையில் மாஸ்டர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் சேதுராமன் எடுத்துக்கொண்ட கடைசி செல்ஃபி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தோல் மருத்துவரான சேதுராமன் திரைத்துறையில் பல பிரபலங்களுக்கு மருத்துவராக இருந்துள்ளார். அப்படி தனது மருத்துவமனைக்கு வந்த பல பிரபலங்களுடன் செல்ஃபி எடுத்துள்ளார்.

View post on Instagram

ஊரடங்கிலும் கட்டுக்கடங்காத கிரண்... கொரோனாவை விட மிரட்டும் கவர்ச்சி..!

அப்படி ஒரு தருணத்தில் மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் நின்று செல்ஃபி எடுத்துள்ளார். அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வாரத்திற்கு முன்பு போஸ்ட் செய்துள்ளார் சேதுராமன். அந்த புகைப்படத்தை ரசிகர்கள் பலரும் சோசியல் மீடியாவில் ஷேர் செய்து தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.