முதல் முறையாக போட்டுடைத்த செந்தில்..! கவுண்டமணி தான் காரணமாம்..! 

செந்தில் கவுண்டமணி என்றால் யாருக்கு தான் தெரியாது.. எத்தனை ஆண்டுகள் வந்தாலும்...காலங்கள் சென்றாலும் மறையாது இருக்கும் காமெடி சீன் என்றால் அது செந்தில் கவுண்டமணி காம்பினேஷன் வாழைப்பழ காமெடி முதல் பெட்டர்மாஸ் லைட் காமெடி வரை அனைத்தயும் சொல்லலாம்.

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் மனம் திறந்து பேசிய நடிகர் செந்தில் பல சுவாரசிய தகவலைகளை பகிர்ந்து உள்ளார். அப்போது, "இப்பபோதைய சினிமா உலகமே வேறு... இப்போதெல்லாம்  நடிக்க லட்சத்தில், கோடிகளிலும் சம்பளம் பேசுகிறார்கள். ஆனால் அப்போதெல்லாம் வெறும் ஐந்தாயிரம் ரூபாய்க்கு நடித்துள்ளோம். ஆரம்பத்தில் ஐந்தாயிரம் முதல் தொடங்கி படிப்படியாக உயர்ந்து இந்த அளவுக்கு உயர்ந்ததை நினைக்கும் போது ஒரு நிம்மதி அடைய முடிகிறது.

இப்போ எடுக்கக்கூடிய படங்கள் எல்லாமே டிஜிட்டல் தான்... ஆனால்  அப்போது அப்படி கிடையாது....எல்லாமே  பிலிம் ரோலில் தான். யாராவது அதிக முறை டேக் வாங்கினால், அதற்கேற்றவேறு அதிக பிலிம் ஆகும்.. செலவும் கூடுதலாக இருக்கும். இதனை எல்லாம் மனதில் கொண்டு, பார்த்து பார்த்து நடிக்க வேண்டி இருக்கும்.

இன்னும் சொல்ல போனால், வைதேகி காத்திருந்தாள் படத்தில் இடம் பெற்றுள்ள பெட்ரோமாக்ஸ் காட்சி சீன் எடுக்கப்பட்ட போது "எப்படிண்ணே இதுல எரியுது என்று கேட்டு ஒரே டேக்கில் நடித்து முடித்தேன்.. அதனை இன்றும் என்னால் மறக்க முடியாது. அதற்கு நான் மட்டுமே காரணம் இல்லை. கவுண்டமணி அண்ணனும் தான் காரணம்  என... பெருமையாக பேசி உள்ளார்.