Asianet News TamilAsianet News Tamil

நடிகர் சங்க தேர்தல் யாருக்கு ஆதரவு! வெளிப்படையாக கூறிய சீமான்!

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல், வரும் ஜூன் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது.  இந்த தேர்தலில் நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியினரும்,  நடிகர் பாக்யராஜின் அணியான சுவாமி சங்கரதாஸ் அணியினரும் மோத உள்ளனர்.
 

actor seman support bakyaraj team
Author
Chennai, First Published Jun 15, 2019, 3:59 PM IST

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல், வரும் ஜூன் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது.  இந்த தேர்தலில் நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியினரும்,  நடிகர் பாக்யராஜின் அணியான சுவாமி சங்கரதாஸ் அணியினரும் மோத உள்ளனர்.

கடந்த முறை தேர்தலில் வெற்றி பெற்ற பாண்டவர் அணியைச் சேர்ந்த பலர்,  இப்போது சுவாமி சங்கரதாஸ் அணியில் தங்களை இணைத்துக்கொண்டு பணியாற்றி வருகின்றனர்.

actor seman support bakyaraj team

எனவே தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்கான பிரச்சாரம்,  தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  குறிப்பாக நடிகர் சங்கத்தில் நாடக நடிகர்களின் வாக்குகள் அதிகம் உள்ளதால் இரண்டு தரப்பினரும் நாடக நடிகர்களின் வாக்குகளை பெற முயற்சித்து வருகின்றனர்.

actor seman support bakyaraj team

இந்நிலையில் நடிகரும் இயக்குனருமான சீமான், எந்த அணிக்கு ஆதரவு என்பதை வெளிப்படையாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.  இதுகுறித்து அவர் கூறுகையில்,  வரும் நடிகர் சங்க தேர்தலில் பாக்கியராஜ் அணியினர் வெற்றி பெற வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம் என தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios