90 களில் முன்னணி நடிகராக இருந்த நடிகர் சரவணன், தற்போது பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக 'பருத்தி வீரன்' படத்தில் இவர் ஏற்று நடித்த சித்தப்பு... செவ்வாழை கேரக்ட்டர், இன்றும் ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்க கூடிய ஒன்றாக இருந்து வருகிறது.

பிக்பாஸ் வீட்டில் கூட இவரை பலர், சித்தப்பு என்று அழைத்ததே இதற்கு ஆதாரம் என கூறலாம்.

இந்த நிகச்சியில், இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருந்த போதிலும், தன்னுடைய கல்லூரி காலங்களில், பெண்களை உரசுவதற்காகவே, சில சமயங்களில் பேருந்தில் பயணம் செய்ததாக கூறினார். இவர் பேசியது சாதாரணமாக அன்று எடுத்து கொள்ளப்பட்டாலும், இதனால் வந்த பிரச்சனைக்கு அவர் தரப்பில் இருந்து மன்னிப்பு கேட்ட போதும், தொடர்ந்து எழுந்த பிரச்சனைகள் காரணமாக வெளியேற்றப்பட்டார்.

எனினும், இவருக்கு ரசிகர்கள் மத்தியில் தற்போது வரை நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இவரை பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றியதற்கு கூட பலர் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்தனர்.

இந்நிலையில், நடிகர் சரவணன், தமிழக அரசு அறிவித்த கலைமாமணி விருதை செம்ம கெத்தாக தனது குழந்தையுடன் வந்து வாங்கியுள்ளார். இந்த புகைப்படங்களை சித்தப்பு ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறார்கள்.