’பழைய உண்மைகளை வெளிப்படையாகப் பேசியதற்காக பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்னை இப்படிப் பழி வாங்குவார்கள் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அந்தக் கோபத்தில் ஒருவரிடம் கூட சொல்லிக்கொள்ளாமல்தான் அந்த இல்லத்தை விட்டு வெளியேறினேன்’என்று மனம் திறக்கிறார் பிக்பாஸ் இல்லத்தை விட்டு திடுதிப்பென்று வெளியேற்றப்பட்ட சித்தப்பு சரவணன்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த திங்கள்கிழமை சரவணன் திடீரென எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி வெளியேற்றப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சரவணன் பெண்கள் குறித்து நாட்களுக்கு பேசிய கருத்திற்கு மன்னிப்பு கேட்டு இருந்தார். ஆனால் ,அவர் மன்னிப்பு கேட்டு ஒரு வாரம் ஆன நிலையில் அவர் பேசியதை தவறு என்று கூறி வெளியேற்றப்பட்டது பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

 இந்த நிலையில் சரவணன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் அளித்துள்ள முதல் பேட்டியில், பிக் பாஸ் பங்குபெற்று சில வாரங்கள் இருந்துவிட்டு பணம் சம்பாதித்து வரலாம் என்று நினைத்து தான் நான் இந்த நிகழ்ச்சிக்கே  சென்றேன் . ஆனால், எனக்கு இப்படியொரு அவப்பெயரையும், களங்கத்தையும் ஏற்படுத்தி என்னை வெளியே அனுப்புவார்கள் என்று தெரிந்திருந்தால் நான் பிக்பாஸிற்கு சென்றிருக்கவே மாட்டேன்.

நான் கூறிய கருத்திற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இவ்வாறு நடந்து கொண்டது வேதனை அளிக்கின்றது. மேலும் உள்ளே இருந்த சக போட்டியாளர்களை கூட சந்திக்காமல் அவர்களுக்கே தெரியாமல் வந்துவிட்டேன். மனதளவில் அவர்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள். நான் பெண்களை பற்றி தவறாக பேசியதாக கூறினார்கள். நான் பெண்களிடம் கல்லூரி காலத்தில் பேருந்தில் விளையாட்டுத்தனமாக தவறாக நடந்து கொண்டது உண்மை தான் . ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு  நான் அதற்காகவா சென்றேன். நான் பெண்களிடம் அங்கே கண்ணியமாக தான் நடந்து கொண்டேன்.பழைய சம்பவத்தை வைத்துக்கொண்டு என்னைப் பழிவாங்குவார்கள் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை’ என்று ஆதங்கத்துடன் கூறியுள்ளார் சரவணன்.