'சூரியன்' பட தயாரிப்பாளர் கேடி குஞ்சுமோன்னை விமான நிலையத்தில் சந்தித்துள்ளார்.

நடிகர் சரத்குமார் வில்லனாக நடித்து, பின்னர் ஹீரோவாக மாறியவர். இவருடைய வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படங்களில் ஒன்று 1992 ஆம் ஆண்டு வெளியான சூரியன் திரைபபடம். இந்த படத்தை பிரபல இயக்குனர் பவித்ரன் இயக்கி இருந்தார். நடிகை ரோஜா இந்த படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் மனோரமா, கவுண்டமணி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த திரைப்படம் வெளியாகி சுமார் 29 வருடங்கள் ஆகும் நிலையில், இந்த படத்தின் தயாரிப்பாளார் கே.டி.குஞ்சுமோன்னை, நடிகர் சரத்குமார் சந்தித்துள்ளார். குறிப்பாக இந்த படத்தின் வெற்றிக்கும் பிறகு தான் பல படங்களில் ஹீரோவாக நடித்து, ரசிகர்கள் மனதியில் நிலையான இடத்தை பிடித்தார் சரத்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் சரத்குமார் 'சூரியன்' பட தயாரிப்பாளர் கேடி குஞ்சுமோன்னை விமான நிலையத்தில் சந்தித்துள்ளார். அப்போது அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு மிகவும் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளந்தாவது... "என் திரையுலக வாழ்வில் திருப்புமுனையாக அமைந்த மிகப்பெரிய வெற்றிப்படம் ’சூரியன்’ திரைப்பட தயாரிப்பாளர் கேடி குஞ்சுமோன் அவர்களை சந்திக்க நேரிட்டது. வாழ்க்கை பயணத்தை பற்றி இருவரும் பேசிக் கொண்டோம்" என கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Scroll to load tweet…