நடிகர் சந்தானம், அடுத்தடுத்த கதாநாயகனாக நடிக்கும் படங்களில் பிஸியாகி வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக கடந்த ஜூலை மாதம் வெளியான 'A1 ' திரைப்படம் ஒரு சில சர்ச்சைகளை சந்தித்தாலும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. 

இந்த படத்தை தொடர்ந்து, தற்போது ட்ரிபிள் ஆக்ஷனில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக இந்த படத்தை தயாரிக்க உள்ள கேஜேஆர் ஸ்டுடியோஸ் சமூக வலைத்தளத்தில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி தெரிவித்தது.

இதுகுறித்து தெரிவித்திருந்த தயாரிப்பு நிறுவனம், 'ஒருத்தரா வந்தாலே காமெடி சரவெடி, இப்போ டிரிபிள் ஆக்சன் வேற! சந்தானம் மூன்று வேடத்தில் நடிப்பதை சூசகமாக கூறி இருந்தனர். மேலும் சந்தானம் நடிக்க உள்ள இந்த படத்தை தன்னுடைய 9வது தயாரிப்பாக இந்த படத்தை சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் டைட்டில் மற்றும், பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகவும் என கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த படத்தின் பெயர், 'டிக்கிலோனா' என அறிவித்து, பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.

இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் யோகி எழுதி இயக்கவுள்ளார். இந்த படத்தில் சந்தானம் காமெடியன், ஹீரோ, வில்லன் என மூன்று வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் டைட்டில் 'டிக்கிலோனா', ஜென்டில் மேன் படத்தில் நடிகர் செந்தில் விளையாடும் விளையாட்டின் ஒரு பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.