தளபதி 64 இல் விஜய்யின் நெருங்கிய நண்பர்...! இப்போதே எதிர்பார்ப்பை கிளப்பிய முக்கிய ரோல்..! 

பிகில் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மற்றொரு புதிய படத்தில் நடித்து வருகிறார் விஜய். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடிக்க உள்ளார். இதுதவிர ஆண்டனி உள்ளிட்ட பிரபலங்களும் இந்த படத்தில் கமிட் ஆகி உள்ளனர். இது ஒரு பக்கம் இருக்க ஒரு சுவாரசிய விஷயமாக விஜய்யின் பல ஆண்டுகால நண்பர்களான ஸ்ரீமன், ஸ்ரீநாத், சஞ்சீவ் ஆகியோரும் இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக சஞ்சீவ் மற்றும் ஸ்ரீநாத் இவர்கள் இருவரும் விஜய்க்கு மிக நெருங்கிய நண்பர்கள். இவர்கள் இருவருமே விஜய் நடித்த பல படங்களில் நடித்து உள்ளனர். ஆனால் இடைப்பட்ட பல ஆண்டு காலங்களில் ஒன்றாக இணைந்து நடிக்கவில்லை.பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சஞ்சீவ் மற்றும் ஸ்ரீநாத் இருவரும் விஜய்யுடன் சேர்ந்து நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சஞ்சீவ் சிறந்த நடிகர் மட்டுமின்றி பல்வேறு சீரியல்களிலும் ஹீரோவாக நடித்து வருகிறார். அதுமட்டுமா..? பல முக்கிய நிகழ்ச்சிகளை நாடு கடந்து சென்று தொகுத்து வழங்குவதிலும் பிஸியாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் விஜய்யுடன் மீண்டும் நடிப்பது ஒரு சுவாரஸ்யத்தை கூட்டியுள்ளது.மேலும் இந்த படத்தில் சஞ்சீவ் ஓர் சவாலான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.