பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், திடீர் என ஏற்பட்ட மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் சம்பவம், திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான சஞ்சய் தத்துக்கு நேற்று, திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டதால் உடனடியாக அவர் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சி திணறல் கொரோனா தொற்றின் அறிகுறி என்பதால் அவருக்கு கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டது. இதில் நெகடிவ் என ரிசல்ட் வந்தது.

இதை தொடர்ந்து, கொரோனா இல்லாதவர்கள் வார்டில் அவர் அனுமதிக்கப்பட்டு, மற்ற சில டெஸ்டுகள் அவருக்கு எடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிகிச்சைக்கு பின் அவருடைய உடல் நிலை சீராக உள்ளதால் இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது மும்பையில் சஞ்சய் தத் மட்டுமே உள்ளார். இவருடைய மனைவி மற்றும் இரு குழந்தைகள், கொரோனா வைரஸ் காரணமாக போடட்டுள்ள தடை காரணமாக வெளிநாட்டில் சிக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.