actor rj balaji meet vaiko
கடந்த சில நாட்களாகவே, காமெடி நடிகர் ஆர்.ஜே.பாலாஜி அரசியலில் குதிக்கவுள்ளதாக பல்வேறு தகவல்கள் பரவி வருகிறது. அதற்கு ஏற்றப்போல் சென்னையின் பல்வேறு இடங்களில் உள்ள சுவர்களில் ஆர்.ஜே.பாலாஜியின் உருவம் வரையப்பட்டு அதில் ஒரு கட்சி கொடியும் இடம்பெற்றிருந்தது.
பின் இது குறித்து வெளியான தகவலில், ஆர் .ஜே.பாலாஜி நடிக்கவுள்ள கன்னட ரீமேக் படத்தின் விளம்பரம் என்றும், இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் மே 18ஆம் தேதி வெளியாகும் என்றும் ஆர்.ஜே.பாலாஜி தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை ஆர்.ஜே.பாலாஜி திடீர் என சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தை வைத்து ஆர்.ஜே பாலாஜி மதிமுக வில் இணையப்போகிராறாரா? என்ற புதிய வதந்தி கிளம்பியுள்ளது. மேலும் விரைவில் இந்த சந்திப்பு குறித்து ஆர்.ஜே.பாலாஜி வாய் திறப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
