பாகுபலி, ஆரம்பம், பெங்களூரு நாட்கள் உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் நடிகர் ராணா. பாகுபலி படத்தில் இவர் நடித்திருந்த பல்வாள் தேவன் என்ற கதாப்பாத்திரம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை அவர் பதிவிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் உடம்புக்கு எந்த பிரச்சனையும் இல்லையே, உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள் என நலம் விசாரித்தனர்.

முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அமெரிக்காவில் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்ததாக கூறப்பட்டது. ஆனால், அதை வதந்தி என ராணா மறுத்திருந்தார். இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து கவலை அடைந்துள்ளனர்.

இந்நிலையில், அவர் விரத பர்வம் என்கிற தெலுங்கு படத்திற்காகத் தான் தனது உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளார் என்று கூறப்படுகிறது.