தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் பிரபல நடிகராக இருக்கும் நடிகர் ரமேஷ் அரவிந்தின் தந்தை நேற்று காலமானர்.
இந்த தகவலை ரமேஷ் அரவிந்த் தனது சமூக வலைத்தளத்தில் இன்று தெரிவித்துள்ளார்.
மேலும் தனது தந்தையின் கடைசி விருப்பமாக கண்தானம், உடல்தானம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக ரமேஷ் அரவிந்த் கூறியுள்ளார்.
இந்த செயல் தனக்கு மட்டுமின்றி அனைவருக்குமே ஒரு உதாரணமாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் ரமேஷ் அரவிந்த்திற்கு கோலிவுட் மற்றும் கன்னட திரையுலகினர் ஆறுதல் கூறி வருகின்றனர்.
