வரும் மார்ச் 23 ம் தேதி இரவு 8 மணியளவில் டிஸ்கவரி சேனலில் காட்டுக்குள் பியர் கிரில்சுடன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்ட மேன் VS வைல்ட்  நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. இதுகுறித்து ஏற்கனவே ப்ரோமோ வெளியிட்டு உறுதி செய்த டிஸ்கவரி சேனல் அடுத்ததாக, ஒரு புரோமோவை வெளியிட்டு, ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. 

டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் மேன் Vs வைல்ட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவதன் மூலம்,  உலக அளவில் பிரபலமானவர் பியர் கிரில்ஸ். காடு, மலை, நீர் நிலைகள் போன்ற இடங்களில் மனிதன், மாட்டிக்கொண்டால் கையில் உள்ள உபகரணங்களை வைத்து, எப்படி தப்பி வருவது என்பதை இந்த நிகழ்ச்சியின் மூலம் விளக்கி வருகிறார்.

இதை தொடர்ந்து, பியர் கிரில்ஸ்சுடன் ஜனவரி மாதம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் உள்ள பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தின் உள்ளே இரண்டு நாட்கள் பயணம் மேற்கொண்டார். 

இந்த நிகழ்ச்சி முடிவடைந்து சில நாட்கள் ஆகும் நிலையில், வரும் 23 ஆம் தேதி, இரவு ஒளிபரப்பாக உள்ளது. ஏற்கனவே வெளியான புரோமோ நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, இரண்டாவதாக வெளியாகியுள்ள புரோமோவில், ரஜினிகாந்த் செய்த சாகரங்கள், நடு காட்டில் அவர் சந்தித்த சவால்கள், பியர் கிரிசுடனான அவரது பயணம், போன்றவற்றை வெளிப்படுத்தும் விதமாக இரண்டாவது புரோமோ வெளியிடப்பட்டுள்ளது. 

நடு காட்டில் கூட, தலைவர் செய்யும் ஓவ்வொன்றும் செம்ம ஸ்டைலிஷ் பாஸ்... புதிய புரோமோ வீடியோ இதோ...