கொரோனா வைரஸின் திடீர் பாதிப்பால் பலர் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். கூலி வேலை செய்பவர்கள் முதல், தொழிலதிபர்கள் வரை ஏதோ ஒரு விதத்தில் சரிவை சந்தித்துள்ளனர்.ஏப்ரல் மாதத்தோடு அனைத்தும் முடிவிற்கு வந்துவிடும் என நினைத்த பலருக்கும், மே 3 ஆம் தேதி வரை, ஊரடங்கு நீடித்தது ஏமாற்றம் தான் என்றாலும், தற்போது தமிழகத்தில் நிலவி வரும் சூழலுக்கு இந்த ஊரடங்கு தேவை என்பதும் பலருடைய கருத்தாகவும் உள்ளது.ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சினிமா கலைஞர்களுக்கு, பலர் உதவி வரும் நிலையில்... நடிகர் ராகவா லாரன்ஸ் எடுத்ததுமே 3 கோடி நிதி உதவியை அளித்தார். 

பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், நடன கலைஞர்கள் சங்கத்திற்கு ரூ.50 லட்சம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25 லட்சம், ஏழை மக்களுக்காக ரூ.75 லட்சம் என முதற்கட்டமாக 3 கோடி ரூபாயை ஒரே தடவையில் அறிவித்து, தமிழக மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

இதையும் படிங்க: பேண்ட் ஜிப்பை கழட்டி விட்டு செல்ஃபி... மோசமான உடையில் பிரபல நடிகை கொடுத்த கன்றாவி போஸ்...!

இதை தொடர்ந்து பல உதவிகளை செய்ய உள்ளதாக தெரிவித்து வந்த ராகவா, பசியோடு இருப்பவர்கள் பசியாற தேவையான முயற்சியை எடுத்து வருவதாக தமிழ் புத்தாண்டு அன்று தெரிவித்தார்.மேலும், ஓவ்வொரு தூய்மை பணியாளர்களுடைய வங்கி கணக்கிலும் பணம் போட உள்ளதாகவும், அதுகுறித்த முயற்சிகளை எடுத்து வருவதையும் தெரியப்படுத்தினார். இதை தொடந்து, சென்னை - செங்கல்பட்டு விநோயோகஸ்தர் சங்கத்திற்கு ரூபாய்.15 லட்சம் நிதி உதவி வழங்கினார். 

இதையும் படிங்க: அம்மாவையே மிஞ்சும் அழகு... முதன் முறையாக மகள்களின் போட்டோவை பகிர்ந்த நடிகை நதியா...!

நலித்த நடிகர்கள் மற்றும் நாடக கலைஞர்களுக்கு உதவும் விதமாக தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு ரூ.25 லட்சம் நிதி உதவி செய்தார். கொரோனா வைரஸ் காலத்தில் மக்களை உதவியால் திணறடித்து வரும் ராகவா லாரன்ஸ், உதவிகளை அறிவிப்பதோடு சரி அதை செயல்படுத்துவதில்லை என்று கூறப்பட்டது. அதற்கு சாட்சியாக நேற்று நடிகர் சங்கத்திற்கு அவர் அளித்த 25 லட்சத்திற்கான காசோலை சோசியல் மீடியாவில் வைரலானது. 

இதையும் படிங்க: ஓ போடு’ பாட்டுக்கு ஓவர் கிளாமர் டிரஸில் டிக்-டாக்... ஊரடங்கிலும் கிளுகிளுப்பை கூட்டும் கிரண்...!

கொரோனாவால் நெருக்கடி காலத்தில் சிக்கித்தவிக்கும் மக்களை அடுத்தடுத்து அடையாளம் கண்டு உதவிக்கரம் நீட்டி வரும் ராகவா லாரன்ஸ், தற்போது மற்றொரு அசத்தலான உதவியை அறிவித்துள்ளார். மீண்டும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் அளித்துள்ள ராகவா லாரன்ஸ், அதனை சென்னை வளசரவாக்கம், கோடம்பாக்கம், வடபழனி பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு அளிப்பதற்காக நிதி உதவி செய்துள்ளார். ராகவா லாரன்ஸின் உதவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.