தமிழ் சினிமாவில் 80 களில் இருந்து, இடைவிடாமல் வெள்ளித்திரை, சின்னத்திரை என மாறி மாறி நடித்து வருபவர் நடிகை ராதிகா. தமிழ் சினிமாவில் தனக்கென அசைக்க முடியாத இடத்தை பிடித்துள்ளார்.

இவர் நடிப்பில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் கடந்த 10 ஆண்டுகளுக்கு, மேலாக அண்ணாமலை, சித்தி,வாணி ராணி, என பல்வேறு தொலைக்காட்சி  தொடர்கள் ஒளிபரப்பானது. மேலும் கடைசியாக 'சந்திர குமாரி' என்கிற சீரியலில் நடித்தார். ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த தொடரில் இருந்து விலகுவதாக கூறினார். தற்போது இவர் நடித்த வேடத்தில் நடிகை விஜி சந்திரசேகர் நடித்து வருகிறார்.

நடிகை ராதிகா தற்போது புதிய சீரியல் ஒன்றில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. திரைப்படங்களிலும் பிஸியாக இருக்கிறார். இப்படி ஆயிரம் வேலைகள் இருந்தாலும், இன்று மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர் நடிகை ராதிகா மற்றும் அவருடைய கணவர் சரத்குமார் இருவரும்.

அதாவது நடிகை ராதிகாவின் மகள் ரேயானின் மகன் தரக் இன்று தன்னுடைய முதல் பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனால் நடிகை ராதிகா மற்றும் அவருடைய கணவரும் நடிகருமான சரத்குமார் இருவரும் மிகவும் சந்தோஷமாக உள்ளனர். தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக, ராதிகா அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பேரனை வாழ்த்தி ட்விட் ஒன்றை போட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்களும் பிரபலங்களும் தொடர்ந்து ரேயானின் குட்டி மகன் தரக்கிற்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.