நடிகர் விஷால் அணியை சேர்ந்தவர்களின் பதவிக்காலம் முடிவு பெற்றதை தொடந்து, வரும் ஜூன் 23 ஆம் தேதி, நடிகர் சங்க தேர்தல் நடைபெற உள்ளது.

இம்முறை, பாண்டவர் அணியை சேர்ந்தவர்களை எதிர்த்து, கே.பாக்யராஜின், சங்கரதாஸ் சுவாமிகள் அணியினர் களமிறங்க உள்ளனர். 

இதில், பொருளாளர் பதவிக்கு பிரபல நடிகர் பிரஷாந்த் தியாகராஜன் போட்டியிட உள்ளதாக, பொது செயலர் பதவிக்கு போட்டியிட உள்ள ஐசரி கணேஷ் தெரிவித்தார். 

இதுகுறித்து அவரிடம் பேசும்போது, தூங்காமல் கூட நடிகர் சங்க பணியை செய்ய தான் தயாராக இருப்பதாக கூறியதாக தெரிவித்தார். நடிகர் பிரஷாந்த் நடித்த படங்கள் தோல்வியடைந்து வந்தாலும், அவரும் வெற்றி படத்தை தர வேண்டும் என்று அடுத்தடுத்த  படங்களில் நடித்து வருகிறார். நடிகர் சங்க தேர்தலிலும் வெற்றி பெறுவாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.