நடிகர் பிரகாஷ்ராஜ் சினிமா பிரபலம் என்பதால், அவருடன் செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்துக்கொள்ள பலர் ஆர்வம் காட்டுவது உண்டு.  அந்த வகையில் சமீபத்தில் பிரகாஷ்ராஜ், ஜம்மு காஷ்மீருக்கு  சென்றுள்ளார்.   

அப்போது ஹோட்டல் ஒன்றில்  நடிகர் பிரகாஷ்ராஜிடம்,  செல்பி எடுப்பதற்காக ஒரு பெண் மற்றும் அவருடைய குழந்தை இருவரும் அனுமதி கேட்டுள்ளனர்.  இதனை ஏற்றுக்கொண்ட பிரகாஷ்ராஜ் அவர்கள் இருவருடனும் செல்பி எடுத்துக்கொண்டார்.

இவர்கள் செல்பி எடுத்த நேரம் பார்த்து அந்த இடத்திற்கு வந்த அந்த பெண்ணின் கணவர், அவருடைய மனைவியையும், குழந்தையும் பிரகாஷ்ராஜுயுடன் செல்பி எடுத்துக்கொண்டதற்காக, பொது இடம் என கூட பாராமல் அனைவர் மத்தியிலும் திட்டியுள்ளார்.  

இதற்கு காரணம் கேட்டதற்கு,  பிரகாஷ்ராஜ் நாடாளு மன்ற தேர்தலின் போது,  தொடர்ந்து மோடியை பற்றி விமர்சித்து பேசியதால், அவருடன் செல்பி எடுக்க கூடாது என வாதிட்டுள்ளார்.  இதனால் அவருடைய மனைவி மற்றும் குழந்தைகள் அந்த இடத்திலேயே அழுதுள்ளனர்.

இவரின் செயலை கண்டு அதிர்ச்சியடைந்த, நடிகர் பிரகாஷ்ராஜ், மிகவும் வருத்தத்துடன் அந்த பெண்ணின் கணவரை அழைத்து, தன்னையும் மோடியையும் முன்னிறுத்தி உங்கள் மனைவியை நீங்கள் திருமணம் செய்துகொள்ள வில்லை என அறிவுரை கூறி அனுப்பியுள்ளார். இந்த சம்பவம் குறித்து தன்னுடைய ட்விட்டர்  பக்கத்தில் கூறி கருத்து தெரிவித்துள்ளார் பிரகாஷ்ராஜ்.