actor parthiban daugther marriage
நடிகர் பார்த்திபன்:
புதிய பாதை திரைப்படம், பார்த்திபன் வாழ்க்கையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்திய திரைப்படம் என கூறலாம். காரணம் இந்த படத்தின் மூலம் தான் பார்த்திபன் கதாநாயகனாக மாறினார். இவர் நடிகை சீதா மீது காதலில் விழுந்ததும் இந்த படத்தின் மூலம் தான். இவர்களின் காதலுக்கும் பெற்றோர் தரப்பில் இருந்து பல பிரச்சனைகள் வந்தாலும் அனைத்தையும் மீறி காதலி சீதாவை கரம் பிடித்தார் பார்த்திபன்.

பன்முகம் கொண்ட பார்த்திபன்:
பல படங்களில் சிறு கதாப்பாத்திரத்தில் அறிமுகமாகி, ஹீரோவாக பல வெற்றிப்படங்களில் நடித்த பார்த்திபன், இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பல்வேறு திறமைகளை கொண்டவர் என்பது குறிப்படத்தக்கது.

வாழக்கை:
நடிகை சீதாவை மனதுக்கொண்ட இவர், தற்போது மனைவியுடன் இருந்து பிரிந்து தன்னுடைய மகள் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.

கீர்த்தனா:
இவருடைய மகள் கீர்த்தனா, இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார். இந்த படத்திற்காக இவர் தேசிய விருதையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கீர்த்தனா திருமணம்;
தற்போது 26 வயதாகும் மகள் கீதனாவிற்கு திருமணம் செய்து வைக்க, நடிகர் பார்த்திபன் ஏற்பாடுகளை செய்து வருகிறார். கீர்த்தனாவின் திருமணம், மார்ச் மாதம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கீர்த்தனா திருமணம் செய்துக்கொள்ள உள்ள மாப்பிள்ளை குறித்து இதுவரை எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

மகள் திருமண ஏற்பாட்டில் மும்முரமாக இறங்கியுள்ளார் பார்த்திபன். தமிழ் சினிமாவில் குறிப்பிட்டு கூறப்படுபவர்களில் முக்கிய நடிகரான பார்த்திபன் மகள் திருமணத்தில் கோலிவுட் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்துக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
