மலையாளத்தில் இளம் முன்னணி நடிகராக வலம் வரும் நிவின் பாலி. சாய்பல்லவி முதன் முறையாக மலையாளத்தில் அறிமுகமான பிரேமம்  படம் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். அதுமட்டுமின்றி நேரம், ரிச்சி ஆகிய நேரடி தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். நிவின் பாலியிடம் நீண்ட காலமாகமேக்கப் மேனாக பணியாற்றி வருபவர் ஷபு புல்பள்ளி. அவருக்கு வயது 37. 

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஷபு வீட்டை அலங்காரம் செய்துள்ளார். அப்போது கிறிஸ்துமஸ் மரத்தின் உச்சியில் நட்சத்திரத்தை கட்ட முயன்ற போது, தவறி விழுந்த ஷபு  புல்பள்ளிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக அவருடைய குடும்பத்தினர் அவரை அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

 

இதையும் படிங்க: இனி முல்லையாக நடிக்கப்போவது இவர் தான்... முதன் முறையாக ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியான புகைப்படங்கள்...!

கிறிஸ்துமஸ் அலங்காரத்தில் ஈடுபட்டுவர் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து உயிர் இழந்தது திரையுலகினரையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஷபுவுக்கு மனைவியும், இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். ஷபுவின் மறைவிற்கு கேரள திரைப்பட இயக்குநர்கள் சங்கம் உட்பட திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.