சின்னத்திரை நடிகை நிலானி திருமணம் செய்ய மறுத்ததால் கடந்த மாதம் அவரது காதலனான  உதவி இயக்குநர் காந்தி லலித்குமார் தீக்குளித்தார்.சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து நிலானியும் காந்தி லலித்குமாரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.  காந்தி லலித்குமாரின் சகோதரர் மற்றும் நண்பர்கள் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கு நிலானிதான் காரணம் என்று குற்றச்சாட்டுக்களை வைத்தனர். காந்தி லலித்குமாரிடம் இருந்து லட்சக்கணக்கான ரூபாயை நிலானி பறித்துக் கொண்டார் என்றும்  அவர்கள் புகார் தெரிவித்திருந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த நிலானி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். காந்தி லலித் குமாரின் தற்கொலைக்கு  தான் காரணமில்லை என்றும்  தன்னை பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.  இதையடுத்து நிலானி தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டார். இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பிறகு நிலானி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஒரு பெண் தனியாக இருந்தால் அதுவும் நடிகை என்றாலே இந்த சமூகத்தில் தவறாக நினைக்கிறார்கள், நான் இப்போது 30 வீடுகளுக்கும் மேல் வாடகைக்கு கேட்டு சென்றுவிட்டேன், கணவர் இல்லை தனியாக இருக்கிறேன் என கூறினால் வீடு தரமாட்டேன் என்கிறார்கள். இந்நிலையில்தான் காந்தி லலித் குமாரை எனது கணவர் என்று பொய் சொல்லி வாடகைக்கு வீடு பிடித்து நானும் என் குழந்தையும் குடியேறினோம். இதுதான் நடந்த உண்மை. மற்றபடி நான் காந்தியிடம் இருந்து பணம் எதுவும் ஏமாற்றி வாங்கவில்லை என கண்ணீருடன் தெரிவித்தார்.