Asianet News TamilAsianet News Tamil

பட பாணியில் நடு கடலில் காதலை வெளிப்படுத்திய பிரபல நடிகர்! விரைவில் டும் டும் டும்!

பிரபல நடிகர் நிக்கில் சித்தார்த்தா அவருடைய காதலி, பல்லவியை கோவாவில் உள்ள நடுக்கடலுக்கு அழைத்து சென்று, தன்னுடைய காதலை பட பாணியில் வெளிப்படுத்தி சம்மதம் வாங்கியுள்ளார்.

actor nikhil siddhartha and pallavi marriage date confirmed
Author
Chennai, First Published Feb 5, 2020, 12:20 PM IST

பிரபல நடிகர் நிக்கில் சித்தார்த்தா அவருடைய காதலி, பல்லவியை கோவாவில் உள்ள நடுக்கடலுக்கு அழைத்து சென்று, தன்னுடைய காதலை பட பாணியில் வெளிப்படுத்தி சம்மதம் வாங்கியுள்ளார்.

இதுகுறித்த புகைப்படங்கள், தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  நடிகர் நிக்கில் சித்தார்த்தா தற்போது  தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.

actor nikhil siddhartha and pallavi marriage date confirmed

இவர் தன்னுடைய நீண்ட நாள் தோழியான மருத்துவர் பல்லவி என்பவரை காதலித்து வந்த நிலையில், அவரிடம் காதலை சொல்ல மிகவும் ரொமான்டிக்கான இடமான கோவாவை தேர்வு செய்து, தன்னுடைய காதலியை நடு கடலில் உள்ள சிறிய தீவுக்கு அழைத்து சென்று, மண்டியிட்டு... கையில் முத்தம் கொடுத்து தன்னுடைய காதலை, பட பாணியில் தெரிவித்துள்ளார்.

actor nikhil siddhartha and pallavi marriage date confirmed

இவர்களுடைய காதலை பெற்றோர் ஏற்று கொண்டதை தொடர்ந்து பல்லவி மற்றும் நிக்கில் சித்தார்த்தா இருவருக்கும் ஏப்ரல் மாதம், 16 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்த அழகிய காதல் ஜோடிகளுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தொடர்ந்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios