தமிழ் சினிமா ரசிகர்கள் பலருக்கும் ஃபேவரட் ஹீரோயின் என்றால் அதில் கண்டிப்பாக நடிகை நயன்தாராவின் பெயரும் இருக்கும். முன்னணி நடிகர்கள், பலர் இவருடன் இணைந்து நடிக்க விருப்பம் தெரிவித்து வந்தாலும். நயன்தார தொடந்து கதைக்கும், கதாநாயகிக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு 'கோலமாவு கோகிலா' படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியானது. இதில் 'எனக்கு கல்யாண ஆசை வந்துடுச்சுடி' என்ற பாடலில் நடிகை நயதாரவிடம் யோகிபாபு காதலை கூறுவது போல் நடித்திருந்தார். 

இந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் பிரபல நடிகரும், ஒளிப்பதிவாளருமான நட்ராஜ் , நயன்தாராவை திருமணம் செய்ய விரும்புது போல் ட்வீட் போட்டுள்ளார்.

இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், 'கட்டுனா கோலமாவு கோகிலாவ கட்டணும்... இல்லை கட்டினவனுக்கு கை குடுக்கணும் என்று கூறி, நயன்தாராவுக்கு புரபோஸ் செய்த யோகிபாபுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நட்டியின் இந்த ட்விட்டை பார்த்து பல ரசிகர்கள், நீங்களுமா? என்று கூறி நயந்தாரமேல் உள்ள காதலை இப்படி வெளிப்படுத்திடீங்க என கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.