'மூடு பனி' என்கிற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் மைக் மோகன். இந்த படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான, 'நெஞ்சத்தை கிள்ளாதே' திரைப்படம் 365 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.

இதை தொடர்ந்து வெளியான கிளிசல்கள், பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் செய்வதில்லை போன்ற படங்கள், ஒரு வருடத்திற்கு மிகாமல் ஓடி, தமிழ் சினிமாவில் இவரை நிலைக்க செய்தது. 

மிக குறுகிய காலத்தில்  எப்படி முன்னணி இடத்தை இவர் பிடித்தாரா, அதே வேகத்தில் திரையுலகத்தி விட்டும் விலகினார். இவர் மீது காதல் கொண்ட நடிகை ஒருவர் காதலை வெளிப்படையாக கூறியும் இவர் ஏற்று கொள்ளாததால், இவருக்கு எ....ஸ் நோய் இருப்பதாக கூறி அந்த நடிகை ஜாலியாக திரையுலகிற்கு டாட்டா காட்டிவிட்டு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.

ஆனால் இவரின் திரையுலக வாழ்க்கை பாழாய் போனது. எனினும் நடிகை சொன்னதை பொய்யாக்கும் விதத்தால், தற்போது வரை நடிகர் மோகன் மிகவும் ஆரோக்கியமாக வாழ்ந்து தான் வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு,  'சுட்டப்பழம்' என்கிற படத்தில் நடித்தார். ஆனால் அந்த திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. இதை தொடர்ந்து இவர் நடிப்பில், கன்னடம் தெலுங்கு, ஆகிய மொழிகளில் வெளியான திரைப்படமும் வெற்றிபெறவில்லை. 

இந்நிலையில் தற்போது இவர் கொடுத்துள்ள பேட்டி ஒன்றில், தன்னுடைய மலரும் நினைவுகள் பற்றியும் கூறியுள்ளார். விரைவில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகவும், இந்த படம் கண்டிப்பாக ரசிகர்களை கவரும் விதத்தில் இருக்கும் என தெரிவித்துள்ளார். இந்த படத்திற்கு பின் நிறைய நல்ல கதை அமைத்தால் தொடர்ந்து படங்களில் நடித்து ரசிகர்களை சந்தோஷ படுத்தவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும், இவர் பீக்கில் இருந்த போது, விஜய் தன்னிடம் கேட்ட உதவியை தான் தட்டாமல் செய்ததாகவும் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், வெள்ளி திரையில் தன்னை மிகவும் அழகாக காட்டிய பெருமை தன்னுடைய காஸ்டியூம் டிசைனரை தான் சேரும். அவர், தனக்கு மிகவும் பொருத்தமான உடைகளை மட்டுமே தேர்வு செய்து கொடுப்பர்.

இதனை ஒருமுறை கவனித்த நடிகர் விஜய் தன்னுடைய காஸ்டியும் டிசைனர் ராஜேந்திரன் பற்றிய விவரங்களை கேட்டதாகவும், நானும் உடனடியாக, ராஜேந்திரனை விஜய்க்கு அறிமுகம் செய்து வைத்து உதவி செய்ததாக தன்னுடைய மலரும் நினைவுகள் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார் மைக் மோகன்.