actor mansoor alikhan admited in hospital

நடிகர் மன்சூர் அலிகான் சமீப காலமாகவே சமூக நலன் கொண்ட செயல்களில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக மக்கள் ஒன்று திரண்டு போராடிய ஜல்லிகட்டு, நீட், ஸ்டெர்லைட் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்தார்.

இதைதொடர்ந்து, சேலம் 8 வழிசாலைக்கு எதிராக மக்கள் போராடிய போராட்டத்திற்கும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் குதித்தார்.

இந்த போராட்டத்தில் நடிகர் மன்சூர் அலிகான், தங்களின் தடையை மீறி 8 வழிசாலை அமைத்தால் 8 பேரை வெட்டுவேன் என ஆவேசமாக பேசினார். இது தொடர்பாக போலீசார் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்தனர்.

பின் சேலம் 8 வழி சாலை அமைக்க அளவெடுக்கும் பணியில் அரசு ஈடுபட்டது. இதனால் சேலம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு நடிகர் மன்சூர் அலிகானை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர் போலீசார். இவரை ஜாமீனில் எடுக்க மனு தாக்கல் செய்தபோது, அதனை ஓமலூர் நீதிமன்றால் தள்ளுபடி செய்துவிட்டது.

இதனால் நடிகர் மன்சூர் அலிகான் கடந்த சனிக்கிழமை சிறையிலேயே, உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டார். கடந்த இரண்டு நாட்களாக எந்த உணவும் எடுதுக்கொள்ளாததால் இவருடைய உடல் நிலை மோசமானதை தொடர்ந்து தற்போது இவரை சேலம் அரசு மருத்துவ மனையில் அனுமதித்துள்ளனர் போலீசார்.