மானாட மயிலாட நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றவரும் மிமிக்ரி கலைஞர் மற்றும் நடிகருமான மனோ தீபாவளி தினத்தன்று நடந்த கார் விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது உடலுக்கு திரையுலக பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

சின்னதிரையில்  தொகுப்பாளராகவும் , மானாட மயிலாட  நிகழ்ச்சியின் மூலம் டான்சராகவும் வலம்வந்தவர் நடிகர் மனோ. நகைச்சுவை நடிகர் காதல் சுகுமாரின் மிக நெருங்கிய நண்பரான இவர் அவருடன் இணைந்து ஏராளமான மேடை நிகழ்ச்சிகளில் பிரகாசித்துவந்தார். இவர் சின்னதிரை மட்டுமல்லாது வெள்ளித்திரையில் வெளியானபுழல் திரைப்படத்தில் மூன்று ஹீரோக்களில்  ஒருவராக  நடித்திருந்தார். மேலும் சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துவந்தார்.

இந்நிலையில் தீபாவளி நாளான கடந்த 27 ஆம் தேதி மனைவி  லிவியாவுடன் அம்பத்தூரில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கார் நிலைதடுமாறி சென்டர் மீடியனில்  மோதி விபத்துக்குள்ளது. இதில் நடிகர்  மனோ சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். அவருடைய மனைவி  லிவியா உயிருக்கு ஆபத்தான நிலையில் ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  மனோவின் மறைவுக்குத் திரைக்கலைஞர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இறந்த நடிகர் மனோவுக்கு  7 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.