சின்னதிரையில்  தொகுப்பாளராகவும் ,  நடனக்கலைஞருமான  நடிகர் மனோ தீபாவளி நாளான கடந்த 27 ஆம் தேதி மனைவி  லிவியாவுடன் அம்பத்தூரில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கார்  விபத்துக்குள்ளானதில் நடிகர்  மனோ சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். இந்த செய்தி திரைத்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

தீபாவளியன்று கார் விபத்தில் மரணமடைந்த பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரும் நடிகருமான மனோவின் விபத்து தொடர்பான சிசிடிவி காட்சியை அவரது நண்பர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சின்னதிரையில் தொகுப்பாளராகவும் , நடனக்கலைஞருமான நடிகர் மனோ தீபாவளி நாளான கடந்த 27 ஆம் தேதி மனைவி லிவியாவுடன் அம்பத்தூரில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கார் விபத்துக்குள்ளானதில் நடிகர் மனோ சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். இந்த செய்தி திரைத்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Scroll to load tweet…

இந்நிலையில் நடிகர் மனோ கார் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கார் பரபரப்பாகச் சென்று கொண்டிருந்த அந்த சாலையில் காரில் மனோ வேகமாக வந்துகொண்டிருந்த நிலையில், இடது பக்கமாக இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் குறுக்கில் வர, காரை நிறுத்தமுடியாமல் திணறிய மனோ இருசக்கர வாகனத்தில் மோதியுள்ளார். அப்போது கார் தலைகுப்புற விழுந்து நொறுங்கியுள்ளது. இந்த சிசிடிவி காட்சியை மனோவின் நண்பர் கமல் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.